நெமிலி அருகே எலத்தூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா காணொளி மூலம் தமிழக முதல்வர் திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 15 May 2023

நெமிலி அருகே எலத்தூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா காணொளி மூலம் தமிழக முதல்வர் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா. தாட்கோ நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1,19,45,000 (ஒரு கோடியே பத்தொன்பது லட்சத்து நாற்பத்தி ஐந்து ஆயிரம்) மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறை கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். 

அதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி அவர்கள் பள்ளியில் குத்து விளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். முன்னிரத்தினம், நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் பெ. வடிவேலு, வருவாய் கோட்டாட்சியர். பாத்திமா, நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர் எ. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர். சோபனா, ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, தாட்கோ செயற்பொறியாளர். சுதா மற்றும் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad