ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் விடுமுறை வேதாகம பள்ளி (VBS) சார்பில் சிறுவர்களுக்கான கலைநிகழ்ச்சி பாஸ்டர். கிருஸ்டோபர், பாஸ்டர்.புனிதன் தலைமையில் நடைபெற்றது. VBS சார்பில் ஐந்து நாட்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு ஆடல், பாடல் மற்றும் பைபிள் வசனங்கள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டவருக்கு முக்கியத்துவம் என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெங்களூரைச் சேர்ந்த பிஜூ தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். இதில் பிஜூ அர்க்ஏஞ்சல், அண்ணா பிஜூ, ஜான் பிரசாந்த், ரேவதி ஜான், பிலஸ்சி, யுவான்சிலின் டெரி, ஏஞ்சலினா, ஆராதனா, பிரான்சிஸ், சசி ரேகா, பவுள் திவாகர், அனிதா புனிதன், லவியா கிருஸ்டோபர் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
.jpg)
No comments:
Post a Comment