ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, பனப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சென்ற வாரம் பெய்த கனமழையால் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துடன் அதை கடந்து செல்கின்றன.

அதை தடுக்கும் வகையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மாநில சாலை பணியாளர் சங்கத் தலைவர் சண்முக ராஜா, மாநில செயலாளர். பெருமாள், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர். வெங்கடேசன், மாவட்ட செயலாளர். சிவசங்கர், மாவட்ட பொருளாளர். ஏ. தணிகாசலம் அவர்களின் முயற்சியால் அரக்கோணம் நெடுஞ்சாலைத்துறை எ. டி தலைமையில் கோட்ட பொறியாளர் எ. இ, ஆர். ஐ. கே. சுகுமார் இவர்கள் தலைமையில் சாலை சீர்திருத்த பணி நடைபெற்றது.
இதில் நாகராஜன், ராசப்பன், ஜெயபால், கேசவன், பாஸ்கரன், சௌந்தரராஜன், சத்திய மூர்த்தி, சுப்பிரமணியன், ராமலிங்கம், வெங்கட்டாசலபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் சாலையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
.jpg)
No comments:
Post a Comment