இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட ஓச்சலம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு புதிய ஓச்சலத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளதாக கூறி புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 ஆண்டின் கீழ் ரூ.39.5 இலட்சம் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் துவங்கப்படாததால் பழைய ஓச்சலத்தை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் நெமிலி பி.டி.ஒ அலுவலகம் எதிரே நெமிலி அரக்கோணம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment