நெமிலி அருகே பெரப்பேரி கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டிய மாடி வீடு இடிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

நெமிலி அருகே பெரப்பேரி கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டிய மாடி வீடு இடிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் அரசுக்கு சொந்தமான பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அதே பகுதியை சேர்ந்த ரவி(60) என்பவர் மாடி வீடு கட்டி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். இது குறித்து தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எந்தவித சமரசமின்றி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். 

இதை தொடர்ந்து நெமிலி தாசில்தார் சுமதி, பி. டி.ஓ.பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, பாரதி, வருவாய் ஆய்வாளர் கனிமொழி ஆகியோர் பெரப்பேரி கிராமம் சென்றனர். அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். 


அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ரவியின் உறவினர்களான இரண்டு பெண்கள் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad