அரக்கோணம் சக்தி மணிகண்டன் கோயிலில் சிறப்பு வழிபாடு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

அரக்கோணம் சக்தி மணிகண்டன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகர் போலீஸ் குடியிருப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மணிகண்டன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்த மாதத்துக்கான உத்திர நட்சத்திர வழிபாடு நேற்று நடந்தது இதையொட்டி ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள சக்தி மணிகண்டன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad