நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் கிராமத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறப்பு விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

நெமிலி அருகே வெளிதாங்கிபுரம் கிராமத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறப்பு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் வெளிதாங்கிபுரம் கிராமத்தில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை ஊராட்சி மன்ற தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி, கால்நடை துணை மருத்துவர் சுதர்சனம் திறந்து வைத்தனர். 


இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ். தணிகைமலை முன்னிலை வகுத்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர். ஜெயம்மாள் செல்லப்பன் வரவேற்புரை செய்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். ஆர். தயாளன், தேவகி, கல்யாணி, எம். சுமதி, மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad