பிள்ளைப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் அமைந்துள்ள முள்செடிகளை ஆர்.ஐ.சுகுமார் மற்றும் தணிகாசலம் அவர்கள் தலைமையில் அகற்றும் பணி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 May 2023

பிள்ளைப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் அமைந்துள்ள முள்செடிகளை ஆர்.ஐ.சுகுமார் மற்றும் தணிகாசலம் அவர்கள் தலைமையில் அகற்றும் பணி!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பிள்ளைபாக்கம் ஏரிக்கரை சாலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் முள் செடிகள், பூண்டுகள் என வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் பயணிக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

அதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.சுகுமார் ஆர்.ஐ,  தணிகாசலம் அவர்கள் தலைமையில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள முள் செடிகள், பூண்டுகள் ஆகியவற்றை அகற்றும் வகையில் சாலை பணியாளர்கள் நாகராஜன், ராசப்பன், ஜெயபால், கேசவன், பாஸ்கரன், சௌந்தரராஜன், சாந்தமூர்த்தி, சுப்ரமணியன், ராமலிங்கம், வெங்கடாசலபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் சாலையின் ஓரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad