ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலச்சந்திரன் தலைமையில் விஏஓ களுக்கு பயிற்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 May 2023

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலச்சந்திரன் தலைமையில் விஏஓ களுக்கு பயிற்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விஏஓ - களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.  முகாமுக்கு தாசில்தார் பாலச்சந்தர் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு தாசில்தார் ஆனந்தன் முன்னிலை வகித்தார். 


இதில் விவசாயிகளின் ஆதார், ரேஷன், பான் கார்டு மற்றும் விவசாய நிலங்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு என அதிகாரிகள் விரிவாக விளக்கினர். 


மேலும் விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும், இ சான்றிதழ் மூலம் வழங்குவதில் மிகவும் பின்தங்கி உள்ளது. 


காரணம் இல்லாமல் சான்றிதழ்களை தள்ளுபடி செய்யவோ அல்லது நிலுவையில் வைக்கவோ கூடாது என வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் விஏஓ - களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் துணை தாசில்தார்கள். பன்னீர்செல்வம், பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள். தனலட்சுமி, வேல்விழி, கனிமொழி, விஏஓ-க்கள் டோமேசன், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad