ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் சமூக பாதுகாப்பு துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர். பார்த்திபன் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் திருமணம் தடை சட்டம், போக்சோ சட்டம், குழந்தைகளின் உரிமைகள், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பொதுமக்கள் அவசர உதவி எண் 181 ஆகியன குறித்து விளக்கி கூறினார். மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் முக்கியத்துவம், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இடையே எப்படிப்பட்ட உறவுமுறை இருக்க வேண்டும் என விளக்கினார்.
இதில் தலைமை ஆசிரியர். வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா, மக்களை தேடி மருத்துவம் வைதீஸ்வரி, ஊராட்சி செயலாளர். சௌமியா, அங்கன்வாடி பணியாளர்கள். உமா, இலக்கியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர். நதியா, சமூக பாதுகாப்பு துறை பணியாளர். பார்த்திபன், பணிகள் பொறுப்பாளர். லட்சுமி, மகளிர் குழு தலைவி. பவானி, மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment