வேட்டாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 May 2023

வேட்டாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்.


மே தினத்தை முன்னிட்டு நெமிலி ஊராட்சி ஒன்றியம் வேட்டாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா அவர்கள் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் வேட்டாங்குளம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர். சாந்தி ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், சுகாதார திட்டம், குடிநீர் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், மகளிர் உதவி குழுக்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி சான்றோர்களுக்கு 5% மானியமும் மற்ற வகுப்பினர்களுக்கு 10% மானியமும் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதில் கிராம நிர்வாக அலுவலர். நிரோஷா,பணி மேற்பார்வையாளர். மணி,ஊராட்சி செயலாளர். சௌமியா, வார்டு உறுப்பினர். துரை, நியாயவிலை கடை அலுவலர்.பாஸ்கரன், மக்கள் நலப்பணியாளர் ஏகாம்பரம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad