இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி புன்னை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது : மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்கவேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

குடிநீர் வசதி எல்லா நேரங்களிலும் தடையின்றி கிடைக்கவேண்டும். நோயாளிகளிடம் லஞ்சம் வாங்ககூடாது அப்படி வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு உள்ளதா என்பதை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது சப் கலெக்டர் பாத்திமா,நெமிலி தாசில்தார் பாலசந்தர், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment