ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா (தீமிதி திருவிழா )வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.


கட்டைக்கூத்து கலைஞர்கள் துரியோதனன் ,பீமன் வேடமிட்டு படுகள காட்சியை அற்புதமாக நடித்துக் காட்டினார்கள். பின்பு மாலையில் நடைபெற்ற தீமிதி விழாவில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதை கண்டு களித்தனர். நெமிலி காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment