பள்ளிகள் திறப்பு நெமிலியில் பள்ளி மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து பெ. வடிவேலு வரவேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 June 2023

பள்ளிகள் திறப்பு நெமிலியில் பள்ளி மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து பெ. வடிவேலு வரவேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசினர்  பெண்கள் மேல்நிலை பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து தமிழக அரசு அறிவித்த ஜூன் 12-ம் தேதியான  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை ஒட்டி பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளை மலர் கொத்து மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கி நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு வரவேற்றார். 


இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர். பவானி வடிவேலு, பேரூராட்சி மன்ற தலைவர். ரேணுகாதேவி சரவணன், நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்தனன், பள்ளி தலைமை ஆசிரியர். சரளாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேகர், செல்வம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad