ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியை ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர். சிவரஞ்சனி, கல்வியாளர். ராஜமாணிக்கம், வார்டு உறுப்பினர்கள். கந்தசாமி, தனசேகர், ஆசிரியர்கள். சுந்தராம்பாள், கஸ்தூரி, அமுதா, தற்காலிக ஆசிரியர்கள். ஜெயா, ஹேமாவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், இடை நின்ற மாணவர்களை பள்ளியில் தக்கவைத்தல், இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல், சிறப்பு தேவை உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல் அவர்களுக்கு தனி கவனம் செலுத்துதல் ஆகியவற்றை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment