கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு விழாவை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் துவக்கி வைப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 June 2023

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டு விழாவை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் துவக்கி வைப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணம் அடுத்த தண்டலம் தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்கள் துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார். 


இதில் மாவட்ட அவை தலைவர் ஏ. கே. சுந்தரமூர்த்தி, மாநில சுற்றுச்சூழலை துணை செயலாளர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், மாவட்ட துணை செயலாளர். சிவானந்தம், குமுதா, மஸ்தான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள். அசோகன், கண்ணையன், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர். சிவா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர். ஜோன் போஸ்கோ மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad