ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பி. என். ஒய் மெலன் எனும் தனியார் கம்பெனி நிதி உதவியுடன் ஆரம்பப் பள்ளி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதில் பி.என்.ஒய் மெலன் நிறுவன உயர் அதிகாரிகள், நெமிலி பீ.டி.ஓ. சிவராமன், நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment