திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 June 2023

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஊழல் முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு ஆகிய சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் மற்றும் லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்து அதிமுக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் அதிமுகவை சார்ந்த ராணிப்பேட்டை சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், நெமிலி மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் முருகன், நகர வர்த்தக அணி தினேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேந்தர், மாணவர் அணி தலைவர் வினோத், மாணவர் அணி செயலாளர் செல்வம், வெங்கட், முத்துக்குமார், ரவி, கணேஷ், சுகுமார், கவுன்சிலர் சங்கர் மற்றும் மாவட்ட, நகர, கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad