ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட திமுக-வின் புதிய நிர்வாகிகள் தேர்வு அன்மையில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளான மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள். கல்பனா, மாலதி, சதிஷினி, அனிதா, தேவி ஆகியோர் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட அவைதலைவர் ஏ. கே. சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர். துரை மஸ்தான், நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட மாணவர் அணி. வினோத், நகர துணை செயலாளர். ஏர்டெல். குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.



No comments:
Post a Comment