ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்திற்கு பல ஆண்டுகளாக தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு சிரமப்படாமல் பயணிக்கும் வகையில் புதிய பேருந்துகளையும் நெமிலி, பனப்பாக்கம், அன்வர்த்திக்கான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் மூன்று அரசு பேருந்துகளை தங்கள் பகுதிக்கு நீட்டிக்க வேண்டி போக்குவரத்து துறை அமைச்சர். சிவசங்கர் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்களை வெளிதாங்கிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர். சிவசங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு உறுதி அளித்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தணிகைவேலு, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர். செல்லப்பன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment