ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அம்ருத் 2.0 கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பைப்லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு பைப் லைன் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு பணியினை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர். ச. வளர்மதி, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான. பெ. வடிவேலு, நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி பேரூராட்சி செயலாளர். ஜனார்த்தனன், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஆர். பி. ரவீந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி. எஸ். முரளி, முன்னாள் பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர். கார்த்திக் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment