அமைச்சர் தலைமையில் திமுக மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 July 2023

அமைச்சர் தலைமையில் திமுக மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தான ஆலோசனை கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆற்ற வேண்டிய கட்சி பணிகள் குறித்தும் ஆலோசனைகள் மற்றும் புதிய மகளிர் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவங்களை மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளிடம் வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். ராணி அவர்கள் கலந்து கொண்டார். 


இதில் மாவட்ட அவைத்தலைவர். ஏ. கே. சுந்தரமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான. ஜெயந்தி குருமூர்த்தி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு மற்றும் இரு அணிகளின் மாவட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad