ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் வழிகாட்டுதலின்படி நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர். ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் ஆசிரியை வெண்ணிலா அவர்கள் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்களின் நலன் குறித்து பேசினார். பாலாஜி என்ற பத்தாம் வகுப்பு மாணவரின் கல்வி தரத்தை உயர்த்த அவருக்கு ஐடிஐ-யில் சேர்த்து படிக்க வைக்க தலைமை ஆசிரியர். ரவி அவர்கள் மூலம் பரிந்துரை செய்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். முருகன், நாகராஜ், பூபதி, நாகராஜன், சுமதி மற்றும் ஆசிரியர்கள் இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment