ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர். தணிகாசலம் அவர்கள் தலைமையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.


இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணைச் செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியை சார்ந்த. மனோ, பிரபாகரன், பிரித்தம், ஜெகதீஷ், காட்டுப்பாக்கம் கிளை கழக செயலாளர். தீனதயாளன், பாஸ்கரன், திமுக கழக மாரியம்மாள் தீனதயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment