நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 July 2023

நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஏ. வசந்தி அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவி. சிவரஞ்சனி, கல்வியாளர். ராஜமாணிக்கம், வார்டு உறுப்பினர்கள். கந்தசாமி, தனசேகர், ஆசிரியைகள். சுந்தராம்பாள், கஸ்தூரி, அமுதா, தற்காலிக ஆசிரியைகள். ஜெயா, ஹேமாவதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 



இந்த கூட்டத்தில் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், இடை நின்ற மாணவர்களை பள்ளியில் தக்க வைத்தல், இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல், சிறப்பு தேவை உடைய குழந்தைகளை அடையாளம் காணுதல், அவர்களுக்கு தனி கவனம் செலுத்துதல் போன்றவற்றை பற்றி இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பேசப்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad