நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 July 2023

நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர். காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் பள்ளியின் தலைமை ஆசிரியர். ரவி அவர்கள் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். எஸ். கார்த்திகேயன் அவர்கள் வரவேற்பில் கொண்டாடப்பட்டது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், மருத்துவர். எம். ராமதாஸ், வழக்கறிஞர். ராஜேஷ், முருகன் ஆகியோர் கலந்துகொண்டு காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad