உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சருடன் இணைந்து வரவேற்ற எஸ். ஜி. சி. பெருமாள்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 July 2023

உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சருடன் இணைந்து வரவேற்ற எஸ். ஜி. சி. பெருமாள்!

ராணிப்பேட்டை மாவட்டம் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான வாலாஜா டோல்கேட் அருகே ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமர் ஆர். காந்தி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் புத்தகம் வழங்கி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். இதில் மாவட்டத்திட்ட குழு உறுப்பினருமான சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், திமுக சுற்றுச்சூழல் அணி முரளி முகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 


No comments:

Post a Comment

Post Top Ad