ராணிப்பேட்டை மாவட்டம் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த போது ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான வாலாஜா டோல்கேட் அருகே ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான. ஆர். காந்தி அவர்கள் தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் ராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு புத்தகம் வழங்கி வரவேற்றார். இதில் மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர். வினோத் காந்தி, நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான. பெ. வடிவேலு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம்

No comments:
Post a Comment