நெமிலி, தக்கோலம், பள்ளூர் ஆகிய பகுதிகளில் மின்சாதன பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் நிறுத்தம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 July 2023

நெமிலி, தக்கோலம், பள்ளூர் ஆகிய பகுதிகளில் மின்சாதன பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் நிறுத்தம்!


ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அரக்கோணம் கோட்டம் பள்ளூர் 110/11 KV SS, தக்கோலம் 110/11KV SS, புன்னை 110/11KV SS ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய  மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை 06/07/2023  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக தக்கோலம், சேந்தமங்கலம், கணபதிபுரம், பள்ளூர், திருமால்பூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி அகரம், சயனபுரம், நெமிலி, புது கேசவாவரம், அருகில் பாடி, ஆனந்தபுரம், உரியூர், புன்னை, காட்டுப்பாக்கம், மகேந்திரவாடி, வேட்டாங்குளம், சென்னம்பள்ளி சம்பத்துராயன் பேட்டை, எலத்தூர், மேல்களத்தூர், மேலேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 


No comments:

Post a Comment

Post Top Ad