ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்விதி ஊராட்சியில் ரூ. 20,00,000 மதிப்பீட்டில் ஆதி திராவிடர் காலனிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவருடன் கூடிய சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


இதில் நெமிலி ஒன்றிய துணை பெருந்தலைவர். தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர். மணிமேகலை வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சிவகாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment