ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழா, ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு தலைமையில் திமுக செயலாளர். ஜனார்த்தனன் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன், புருஷோத்தமன், ஹரிகிருஷ்ணன், சங்கர், முகமது அப்துல் ரகுமான், கார்த்திகேயன், சுகுமார், ஹரிஷ் மற்றும் நெமிலி பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment