வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் திறப்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 September 2023

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் திறப்பு.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ஊரக வளர்ச்சி முகமை மூலம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தில் குத்து விளக்கேற்றினார்கள். 

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி. இ.ஆ.ப.. திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி. ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன். துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன். மாவட்ட துணைச்  செயலாளர் குமுதாகுமார்,  ஊராட்சி மன்ற தலைவர் பா.முனுசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் வாலாஜா ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம் அம்மூர் பேருர் செயலாளர் பெரியசாமி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.சி.சக்திவேல்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்கள்  மாவட்ட இளைஞர்அணி ஊராட்சி மன்ற தலைவர் மணியம்பட்டு மோகன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜெய்சுரேஷ் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad