10 ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி சென்று பாலியல் டார்ச்சர் : ராணிப்பேட்டையில் பகீர் சம்பவம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 October 2023

10 ஆம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி சென்று பாலியல் டார்ச்சர் : ராணிப்பேட்டையில் பகீர் சம்பவம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே திருமால்பூரை சேர்ந்த 24 வயதான சதீஷ் என்பவர், கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 11ஆம் தேதி மாலை  அங்குள்ள கடைக்கு மாணவி பேனா வாங்கச் சென்றார். அப்போது மாணவியிடம் சென்ற சதீஷ், செய்யாறில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாக்கு சென்று வரலாம் என்று அழைத்துள்ளார். ஆனால், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த போதும் மாணவியை வலுக்கட்டாயமாக சதீஷ் காரில் கடத்திச் சென்றார். அதில், இருந்த அவரின் நண்பரான குமரேசன், மற்றொரு சதீஷ்குமார் ஆகியோர் மாணவியை அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.


மறுநாள் மாணவியை திருமால்பூர் அருகே இறக்கிவிட்டு அந்த மூவரும் தப்பிச் சென்றனர். வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கு, அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், சதீஷ் மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். 


10 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் திருமால்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad