ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி சுசீலா (70). இவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட ஒருவர் சுசீலா வீட்டு சாவியை எங்கு வைத்து சென்றார் என்பதை தேடி கண்டுபிடித்து பூட்டை திறந்து நகை, பணத்தை திருடி சென்றார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் சுசீலா புகார் கொடுத்தார் . இன்ஸ்பெக்டர் பழனிவேல் ,சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் , பாராஞ்சி கிராமம் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த சுகன்( 25), அவர் மனைவி தமிழ்ச்செல்வி (22) ஆகியோர் சுசீலாவின் வீட்டுக் கதவை திறந்து வீட்டில் வைத்திருந்த மூக்குத்தி மற்றும் ஏடிஎம் கார்டை திருடி உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்...

No comments:
Post a Comment