இராணிப்பேட்டை மாவட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளியநல்லூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பழச்செடி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர். அமுதா சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். ரம்யா ஈஸ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தரம்மாள் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மா, நெல்லி, கொய்யா, எலுமிச்சை ஆகியவை கொண்ட பழச்செடி தொகுப்பை வழங்கினார்.
இதில் ஆர்.பி. ரவீந்திரன், எஸ். ஜி. சி. பெருமாள், பிரகாஷ், அ.சீனிவாசன், சண்முகம், கார்த்திக், வெங்கடேசன், தமிழரசு, சுமிதா, சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment