வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் நல்லமுறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிந்தார் . உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெ.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) அவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் (பொறுப்பு அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் மற்றும் காவேரிப்பாக்கம் வட்ட ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment