இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்க்கை வழிகாட்டி கையேட்டினை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ச.முரளி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், பயிற்சியாளர் யுவராஜ் பாண்டியன் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment