நெமிலி அருகே இரவு நேரங்களில் தொடரும் வழிப்பறி பொதுமக்கள் பீதி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 October 2023

நெமிலி அருகே இரவு நேரங்களில் தொடரும் வழிப்பறி பொதுமக்கள் பீதி!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பனப்பாக்கம் உள்வட்டத்தை சேர்ந்த துறையூர், உளியநல்லூர், கலப்பலாம்பட்டு, சிறுவளையம், பெருவளையம், பிள்ளைப்பாக்கம், வேளியநல்லூர், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்ரீ பெரும்பத்தூர், சங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். 

இரவு பணி முடித்துவிட்டு நள்ளிரவில் 12 மணிக்கு மேல் பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அவரவர் கிராமத்துக்கு சென்றுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் தொழிலாளர்களை மடக்கி அவர்களிடம் உள்ள செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து செல்கின்றனர். 


நேற்று முன்தினம் துறையூர் ரோட்டில் 4 தொழிலாளிகளிடம் இருந்து செல்போன் மிரட்டி பறித்து சென்றுள்ளனர். பனப்பாக்கம் ஏரிக்கரை மற்றும் நெடும்புலி மந்தைவெளி அருகே வழிப்பறி நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இரவு நேரத்தில் கம்பெனியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் தொழிலாளர்கள் தனியாக வர வேண்டாம் வழிப்பறி தொடர்ந்து நடைபெறுகிறது என செய்தியை பரப்பி வருகின்றனர். 


இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக மாவட்ட எஸ். பி கிரண்ஸ்ருதி உரிய நடவடிக்கை எடுத்து போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad