வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட்ட 250 கிலோ மெகா மின்வாட் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட்ட 250 கிலோ மெகா மின்வாட் டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா.


வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 250 கிலோ மெகா மின்வாட் டிரான்ஸ்பார்மர் புதிதாக நிறுவப்பட்டுள்ளதை தமிழ்நாடு மின்சார வாரிய செயற் பொறியாளர் குமரேசன் வாலாஜா முன்னாள் உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், தற்போதைய வாலாஜா உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில், பொறுப்பு உதவி பொறியாளர் சீனிவாசன் முன்னிலையில் பூஜை செய்து இனிப்புகள் வழங்கி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் விஜயா முரளி   மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா நந்தினி மற்றும்  250 கிலோ  மெகா மின்வாட்  டிரான்ஸ்பார்மர் புதியதாக நிறுவ பக்க பலமாக இருந்த  சமூக ஆர்வலர்  வாலாஜாபேட்டை ஆட்டோ ஓட்டுனர்  அலீம் அகமது, பிஜேபி சதீஷ்குமார், சுரேஷ்குமார், ஆகியோர்களுக்கு  தலைமை மருத்துவர் உஷா நந்தினி அனைவருக்கும்  சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இவர்களுடன் மருத்துவர் வெங்கடேஷ், மருத்துவமனை சூப்பர்ண்ட் சிவகுமார், மருத்துவமனை செவிலியர்கள் முன்னாள் மின் பாதை ஆய்வாளர்  ஓய்வு மணி, மற்றும் வாலாஜா நகர மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இறுதியில்  சமூக ஆர்வலர் ஆட்டோ ஓட்டுனர் அலிம் அகமது, சமூக ஆர்வலர் பிஜேபி சதீஷ்குமார், சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad