ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று நெமிலி பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 500- க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை எஸ். ஜி. சி. பெருமாள் அவர்கள் கொண்டாடினார்.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். பா. செ. நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். அ. சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். தனசேகரன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வழக்கறிஞர் குமரகுரு, நெமிலி நகர நிர்வாகிகள். சுகுமார், சுந்தரமூர்த்தி, எல்லப்பன், சதீஷ், ஒன்றிய இளைஞர் அணி. முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றி சூழல் அணி அமைப்பாளர். ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:
Post a Comment