வாலாஜாவில் நகர திமுகவின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 November 2023

வாலாஜாவில் நகர திமுகவின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.


திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி வாலாஜாபேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் தில்லை, அவை தலைவர் ஜெகதீசன், துணைச் செயலாளர்கள் இர்ஃபான், நந்தகுமார், பொருளாளர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதி விஜி, ஆனந்தன் நகர மன்ற தலைவர் ஹரிணித்தில்லை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா ஸ்ரீனிவாசன், துணை அமைப்பாளர்  BLT சிவா, நகர மன்ற துணைத்தலைவர், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கமல் ராகவன், நகர மன்ற உறுப்பினர்கள் செங்கையபாபு, ரவிச்சந்திரன் நகர சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் செந்தில் மற்றும் திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad