நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையத்தில் திமுக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலு அவர்கள் தலைமையில், நெமிலி பேரூர் செயலாளர். ஜனார்த்தனன் அவர்கள் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, நெமிலி பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவருமான. பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணண், நெமிலி பேரூராட்சி மன்றத் தலைவர் ரேணுகாதேவ சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர். சங்கர், நிர்வாகிகள். புருஷோத்தமன், முஹம்மது அப்துல் ரஹ்மான், பேரூர் நிர்வாகிகள். சேகர், சுகுமார், கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad