ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கு பயிர் கடன் அளவு மதிப்பீடுகள் மாநிலத் தொழில்நுட்பக் குழுவிற்கு பரிந்துரை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முருகேசன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் சிவக்குமார். இணை இயக்குனர் வேளாண்மை (பொ) செல்வராஜ், வேளாண்மை நேர்முக உதவியாளர் ரு.தபேந்திரன், நபார்டு வங்கி மாவட்ட மேம்பாட்டு மேலாளர் அருண் விஜய், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜிகுமார் மற்றும் விவசாயிகள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment