மேல்விஷாரம் அருகே வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 November 2023

மேல்விஷாரம் அருகே வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது.


ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மேல்விஷாரம்  ஹாஜி ப்பேட்டை 1வது தெருவில்  26.11.2023   அன்று இரவு  ஆதாம் பாஷா என்பவரின்  வீட்டினுள்  பீரோவை  உடைத்து அதில் உள்ள நான்கு சவரன் தங்க  நகைகள்  திருடு போனது சம்பந்தமாக  ஆதம்பாசா  வயது 42 s/o   அப்துல் சமீர்    ஹாஜி  பேட்டை 1 வது தெரு  மேல்விஷாரம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து  புலன் விசாரணை மேற்கொண்டு  வந்த நிலையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி  கிரண் சுருதி IPS   அவர்களின் வழிகாட்டுதலின்படி  ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர்  திரு பிரபு அவர்களின் மேற்பார்வையில்  ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர்  திரு விநாயகமூர்த்தி  அவர்கள் தலைமையிலான  தனிப்படை  தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில்  இன்று 29.11.2023  ஆம் தேதி  பகல்  12 மணி அளவில்   கீழ்விஷாரம்  குளத்துமேடு பஸ் ஸ்டாப் அருகில்  வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது  சந்தேகத்திற்கு இடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி   விசாரித்தபோது  அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால்  அவர்களின் இருசக்கர வாகனத்தை  சோதனை இட்டபோது  அதில்  மேல்விஷாரம் ஹாஜி பேட்டை 1 வது தெருவில்  திருடப்பட்ட நகை என்று தெரியவந்தது  மீண்டும் விசாரிக்க அவர்கள் தங்கள் செய்த  குற்றத்தை ஒப்புக்கொண்டு  திருடப்பட்ட நகைகளை ஒப்படைத்தனர்.

அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும்  கைப்பற்றப்பட்டது   அவர்களது பெயர் விலாசம் விசாரிக்க 1.  பைரோஸ்  வயது 21 S/O  அஷ்ரப் அலி  ஹாஜி பேட்டை  1வது தெரு  மேல்விஷாரம் 2. அமீன் பாஷா வயசு 24 S/O   அசன்  காயிதே மில்லத் தெரு மேல்விஷாரம்  என்று தெரியவந்தது  அவர்களை கைது செய்து  அவர்களிடமிருந்து  நான்கு சவரன் தங்கங்கள் நகைகள்  திருட்டுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது  அதன் மொத்த மதிப்பு  சுமார் 2 லட்சம்  ஆகும்  எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad