ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர், கூலி தொழிலாளி அருள் பரிமளா அவர்களின் இரண்டாவது மகன் ராகவேந்திரா வயது 13 அவர்கள் சாலை விபத்தில் மூளை சாவடைந்தார்.
இந்நிலையில் அவர்களுடைய உடல் உறுப்பினை மற்றவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்கள், அவர்களது உடலுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினார் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் A.K.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், சர்வந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ரமேஷ், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், ஏழுமலை, சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:
Post a Comment