ராணிபேட்டையில் மாபெரும் கல்விக் கடன் முகாமில் 8 மாணவ மாணவியர்களுக்கு ரூ.36.7 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடனுதவியை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

ராணிபேட்டையில் மாபெரும் கல்விக் கடன் முகாமில் 8 மாணவ மாணவியர்களுக்கு ரூ.36.7 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடனுதவியை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!!


கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் இன்று (28.11.2023) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், அரப்பாக்கம் அன்னை மீரா, தொழிநுட்பவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக் கடன் முகாமில் 8 மாணவ மாணவியர்களுக்கு ரூ.36.7 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடனுதவி வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். ஏழை எளிய மாணவியர்கள் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியினை பயிலும் வகையில் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். 


இத்திட்டத்தின் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோன்று பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தினால் இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.


அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வங்கியாளர்களுடன் ஒருங்கிணைத்து கல்விக் கடன் மேளாக்களை ஏற்பாடு செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவுறித்தியுள்ளது. அதன்படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கல்விக்கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் மட்டும் மொத்தம் 2 இலட்சம் மாணவர்களுக்கு கல்விகடன் இலக்காக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 3000 வழங்கவேண்டும், என வழங்கவேண்டும் நிர்ணியக்கப்பட்டடுள்ளது. 


நமது என மாணவர்களுக்கு கல்விகடன் இலக்காக நிர்ணியக்கப்பட்டடுள்ளது. இந்தவருடம் 646 மாணவர்களுக்கு ரூபாய் 13.73 கோடி கல்விக்கடனாக இதுவரை வழக்கப்பட்டு உள்ளது. கல்விக் கடன் பெற்றுள்ளவர்கள் படித்து வேலைக்கு சென்ற பின்னர் மீண்டும் அத்தொகையை திருப்பி செலுத்துவதன் மூலம் பிற மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து வங்கிகள் மூலம் கல்விக் கடனுதவிகள் வழங்க முடியும். ஆகவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் இது போன்ற நல்வாய்ப்புகளை பயன்படுத்தி தொடர்ந்து நன்றாக படித்து வாழ்வில் உயரிய நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.


இந்நிகழ்ச்சியில் குளோபல் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரி மற்றும் SSS கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச் சார்ந்த சார்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னகுமார், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார், ஒன்றியக் குழுத் தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் தாமோதிரன், இயக்குநர்கள் பிரசாத், கிஷோர்குமார், முதல்வர் கோபிநாதன், அரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பேபி கண்ணப்பன், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள், அனைத்து கல்லூரி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad