ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஹார்ட்ஃபுல்னெஷ் சார்பில் உடலும் உள்ளமும் நலம் பெற ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மற்றும் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஹார்ட்ஃ புல்னெஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்..
இந்த நிகழ்வில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்ரய்யா, வாலாஜாபேட்டை நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணைத்தலைவர் கமல்ராகவன், ஹார்ட்ஃ புல்னெஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் லஷ்மி நாராயணன் என பலர் கலந்து கொண்டனர் சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..

No comments:
Post a Comment