முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு செய்யும் முகாமினை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 2 December 2023

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு செய்யும் முகாமினை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வாலாஜா மற்றும் சோளிங்கர் ஆகிய இரண்டு பகுதியில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கான பதிவு செய்யும் முகாமினை பார்வையிட்டார்கள்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் (02.12.2023) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைக்கான பதிவு செய்யும் முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்திட வருவாய்த்துறை சான்று உடனுக்குடன் பயனாளிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு உடனடியாக மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். இம்முகாமில் புதியதாக திருமணமானவர்கள், விடுபட்டவர்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய ஏதுவாக இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார், ரேஷன் அட்டை போன்ற உரிய ஆவணங்கள் கொண்டு பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பம், ஒரு வருடத்துக்கு ரூ.5,00,000 வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம்.


நடைபெற்ற இரண்டு முகாம்களில் 1090 நபர்கள் பதிவிற்கு வருகைப் புரிந்தனர். இதில் 50 நபர்கள் வாலாஜா வட்டத்திலிருந்தும், 180 நபர்கள் சோளிங்கர் வட்டத்திலிருந்தும் என மொத்தமாக 230 நபர்கள் புதிய காப்பீட்டு அட்டைக்காக பதிவு செய்தனர். Card Lock, பெயர் சேர்த்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 860 நபர்கள் பதிவு செய்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இம்முகாம்கள் நாளை 03.06.2023 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சிகளில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நாகராஜு, துணை இயக்குனர் (சுகதாரம்) மரு.மணிமாறன், மாவட்ட மருத்துவ காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவ நாயர், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மரு.அர்ச்சனா, நகரமன்ற உறுப்பினர்கள் அசோகன், சிவானந்தம், சண்முகம்,கோபால், ஊராட்சி மன்றத் தலைவர் கற்பகராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad