பூட்டுத்தாக்கு மதுபான கடை அகற்றக்கோரி பாஜகவினர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 November 2023

பூட்டுத்தாக்கு மதுபான கடை அகற்றக்கோரி பாஜகவினர் உண்ணாவிரத ஆர்ப்பாட்டம்.


இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு மேல குப்பம் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது சாலை வழியாக ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மாணவச் செல்வங்களும் சென்று வருகின்றார்கள் மது பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு அங்கேயே மதுவை அருந்துவது மேலும் சாலை ஆக்கிரமிப்பது போன்ற செயல்பாடுகள் அன்றாடம் நிகழ்ந்து வருகின்றன  இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சத்தோடு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவே இந்த மதுபான கடையை அகற்றக்கோரி பல்வேறு கட்சிகளும் பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்பதால் ஆற்காடு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


இப்போராட்டத்திற்கு ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார் முன்னாள் ஒன்றிய தலைவர் ரமேஷ் பாபு முன்னிலவித்தார் மண்டல பொறுப்பு செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார் இப் போராட்டத்தில் திரலான பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad