ஆற்காடு இமைகள் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பாக நேற்று இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உதவி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 25 November 2023

ஆற்காடு இமைகள் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பாக நேற்று இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உதவி.


இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இமைகள் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பாக நேற்று இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் மற்றும் சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கும் போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியை இராணிப்பேட்டை ஆதரவற்றோர் இல்லத்தில் ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் திருமதி. பவளக்கொடி B.D.S., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பிறகு வாலாஜா முதல் இரத்தினகிரி வரை சாலை ஓரங்களில் தங்கியுள்ள சுமார் 160 ஆதரவற்றோருக்கும் நேற்று இரவு போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கினோம். 


இந்நிகழ்ச்சியை இமைகள் கல்வி மற்றும் பொது நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர். ர. சையத் பாரூக் தலைமை தாங்கினார் மற்றும் கானா கவி, இமைகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad